கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய கட்டிடத்தை டி.ஜி.பி.சைலேந்திரபாபு காணொளி மூலம் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தால் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தை இன்று டிஜிபி. சைலேந்திரபாபு காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து
திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். இதில் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment