பழனி முருகனுக்கு மொட்டை போட்ட திருப்பூர் முருகபக்தரின் பர்ஸை மொட்டை போட்ட பழனி சரவண பொதிகை ஊழியர்கள்! உலகெங்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது இங்கு வரும் பக்தர்கள் கோரிக்கை வைப்பதும் அது நிறைவேறியவுடன் சரவணப் பொதிகையில் முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உள்ளது நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கே முடி காணிக்கை செலுத்துவார்கள் விசேஷ காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவார்கள் இந்த நிலையில் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும் முருக பக்தருமான
பழனிக்குமார் திருப்பூரில் இருந்து பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருகோவிலில் முடி காணிக்கை செலுத்தும் வேண்டுதலை நிறைவேற்ற சரவண பொய்கை முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து முடி காணிக்கை எடுப்பவரிடம் அமர்ந்து முடி கணக்கை எடுத்தவுடன் முடி எடுத்தவர் அவரின் சம்பளமாக 300 ரூபாய் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்றும் கொடுக்கவில்லை என்றால் இங்கிருந்து நீங்கள் செல்ல முடியாது என்று கூறியதாகவும் இதனால் பழனிக்குமார் தன்னிடம் 200 ரூபாய்தான் இருக்கிறது என்று கூறியதாகவும் அதை புலம்பிக்கொண்டே வாங்கிக் கொண்டாதாகவும் மேலும் அங்கே கூட்டிப் சுத்தம் செய்யும் பெண் ஒருவர் இங்கே மொட்டை அடிப்பவர்கள் எல்லோரும் எனக்கு டீ குடிக்க 20 ரூபாய் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று அவரும் அடாவடியாக இருபது ரூபாய் பறித்துக் கொண்டார் என்றும் அங்கு சுற்றிலும் பணம் வசூலிக்க கூடாது என்று எச்சரிக்கை வாசகங்கள் இருந்தும் கொஞ்சமும் பயம் இல்லாமல் பக்தர்களிடம் கட்டாய பணம் பறிப்பு நடந்து கொண்டுள்ளது வேலை செய்யும் காவலாளிகள் பணம் பறிப்பு நடப்பதை கண்கூடாக பார்த்தாலும் தடுக்காமல் இருப்பதாகவும் அப்பட்டமாக பொதுமக்களிடம் பணம் பறிப்பவர்களை அதிகாரிகள் தட்டிக் கேட்காமல் அமைதியாக இருக்கிறார்கள் பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்டுவதையும் பாதிக்க படுவதையும் தடுக்கவும் பாதிக்கப்பட்ட பழனிக்குமார் தண்டாயுதபாணி கோவிலின் தேவஸ்தான அலுவலகத்தில் புகார் தெரிவித்தார் பின்னர் அவரிடம் அடாவடியாக பறிக்கப்பட்ட பணம் 220 கிடைக்கப்பெற்றது லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்லும் அனைத்து பகுதிகளிலும் சிசிடி கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும் அதில் முக்கியமான இடங்களில் ஒன்று முடி காணிக்கை செலுத்தும் இடம் அங்கு எச்சரிக்கை பலகை வைத்தால் மட்டும் போதாது சிசிடி கேமரா வைத்து இதுபோல குற்றங்கள் அங்கே நடைபெறும் போது கண்காணித்து தடுக்க வேண்டிய கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களது பணியை சரிவர செய்யவில்லை என்றும் தமிழக அரசு கண்காணித்து நடவடிக்கை எடுத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் இனி வருங்காலங்களில் பக்தர்களிடம் எந்த ஒரு காரணத்திற்காகவும் கட்டாயம் பணபறிப்பில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடக்கூடாது என்று சமூக ஆர்வலர் பழனிகுமார் கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் காஜா மொய்தீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment