தென்னம்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து ஏழு பவுன் தங்க நகை ரூபாய் 60,000 கொள்ளை
திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியில் மோகனப்பிரியா(35) என்பவரின் மது ஸ்டுடியோவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 7 பவுன் தங்க நகை, ரூ.,60 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்தில் வேடசந்தூர் டிஎஸ்பி.துர்கா தேவி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்று வருகிறது மேலும் இச்சம்பவம்அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகக் குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..
No comments:
Post a Comment