பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த பக்தர்களிடம், பணம் வசூலிக்கும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என இணை ஆணையர் மாரிமுத்து எச்சரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம்
பழனி முருகன் கோயிலுக்கு முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் அங்குள்ள தொழிலாளர்கள் பணம் வசூலிப்பதாக பரவலாக புகார் வந்தது. மேலும் இதுதொடர்பாக பக்தர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வீடியோவும் வைரலானது.
பழனி முருகன் கோவில் இணை ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாரிமுத்து நேற்று திருஆவினன்குடி கோயில், சரவணப்பொய்கை மற்றும் அங்குள்ள முடிக்காணிக்கை நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்:- பழனி முருகன் கோயிலில் முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிலாளர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதேபோல் பக்தர்களிடம் தரக்குறைவாக பேசும் கோவில் பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment