திண்டுக்கல்லில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேனில் தீ விபத்து- 20 பேர் உயிர் தப்பினர்.
திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. காலையில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு டிரைவர் பள்ளி நோக்கி வந்து கொண்டு இருந்த போது திண்டுக்கல்-மதுரை சாலையில் பள்ளி வேன் வந்தபோது, வேனின் பின்புறம் தீ விபத்து ஏற்பட்டு பேட்டரியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதைப் பார்த்ததும் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பள்ளி வேன் டிரைவரிடம் இது குறித்து தெரிவித்தனர். உடனடியாக பள்ளி வேனை நிறுத்திய டிரைவர், மாணவர்கள் அனைவரையும் கீழே இறக்கினார். பிறகு அப்பகுதி பொதுமக்கள் வேன் மீது தண்ணீரை ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment