திண்டுக்கல்லில் குர்பாணியின் போது துள்ளிக்குதித்த ஆடு மின் கம்பியில் சிக்கியதால் பரபரப்பு.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதி, எம்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டில் குர்பாணி கொடுப்பதற்காக ஆடு வளர்க்கப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் மாடியில் ஆட்டை வெட்ட தயார் நிலையில் வைத்திருந்த போது, எதிர்பாராதவிதமாக துள்ளிக்குதித்து ஓடியது. அப்போது அங்கிருந்த மின் கம்பத்தில் ஆடு சிக்கியதால் அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. மின் கம்பியில் சிக்கிய ஆட்டின் 4 கால்களும் கருகி உயிருக்கு போராடியது. உடனடியாக ஏணியை வைத்து ஆட்டை குச்சி மூலம் கீழே தள்ளினர். பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment