பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் வருமானத்தில் ஒரு பங்கினை உறவினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற திருக்குர்ஆன் வாசகத்தின் படி பக்ரீத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில்
திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசலில் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையானது இமாம் ரபீக் மௌலவி ஓதி தொழுகை நடத்தினார். திண்டுக்கல் நகரில் உள்ள இஸ்லாமியர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது குழந்தைகளுடன் பள்ளியில் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். இதையடுத்து அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment