திண்டுக்கல்லில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க.வினர் 5 பேர் கட்சியிலிருந்து நீக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊர்வலமாக குதிரையில் சவாரி செய்தும், அன்னதானம் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதனையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக நிர்வாகிகளான வேலம்பட்டி கந்தசாமி, கொசவபட்டி மரிய ஆரோக்கியம், பூசாரிபட்டி உத்தமன், கண்ணமனூர் கனகராஜ், ராகலாபுரம் சரவணன் ஆகிய 5 பேரையும் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment