மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 14 June 2023

மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.


 பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் 

மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.


மத்திய அரசு, தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை மூலமாக பழிவாங்கும் போக்கினை கண்டித்து

திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் நாகல் நகர் சிண்டிகேட் பேங்க் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, மச்சக்காளை, அம்சவல்லி, கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாநகர மாவட்ட துணை தலைவர் அப்துல் ரகுமான், பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, மாமன்ற உறுப்பினர் பாரதி, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா 

உள்ளிட்ட காங்கிரஸார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 

கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad