திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 23 June 2023

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு லைசால் கிரிமினசினி வாங்கியது தொடர்பாக 32 லட்சத்து 40 ஆயிரம் முறைகேடு செய்து இழப்பு ஏற்படுத்தியதாக கூறி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக திருமதி மகேஸ்வரி கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டில் பணிபுரிந்து வந்தார். அப்பொழுது கொரோனா கால கட்டம் என்பதால் கொரோனா தடுப்பு பணிகளுக்காக (லைசால்) கிருமிநாசினி கொள்முதல் செய்துள்ளார். அதில் முறைகேடு நடந்ததாக கூறி காஞ்சிபுரத்தை சேர்ந்த சுடர்மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் ரூ 32 இலட்சத்து 40 ஆயிரம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து நேற்று 22.06.23 காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் திருமதி மகேஸ்வரி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு கடந்த மூன்று மாதமாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இன்று 23.06.23 திண்டுக்கல் RM காலனி 1வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஆணையர் மகேஸ்வரி வீட்டிற்கு காலை 7:30 மணிக்கு வருகை தந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில்

6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருப்பூரில் உள்ள மகேஸ்வரி வீட்டிலும், காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாற்றிய துப்புரவு ஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ், ராமக்கிருஷ்ணன் என 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad