பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாரத்குமார் (27), அஜித் (28) ஆகியோர் அப்பகுதியில் உள்ள சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இருவரையும் பழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment