போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு 46 ஆண்டுகள் சிறை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 30 June 2023

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு 46 ஆண்டுகள் சிறை...


ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை - திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு தவறான புகைப்படத்தினை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக மணி(60) மற்றும் கனகராஜ்(60) ஆகிய இரண்டு பேரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, மணிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ 4,500 அபராதமும் மற்றும் கனகராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2000 அபராதமும் வைத்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad