தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 லட்சம் மதிப்பிலான 1500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல் பழனி ரோடு பைபாஸ், மிலிட்டரி கேன்டின் அருகில் உள்ள ஒரு குடோனில்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுங்கி வைத்து மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும்
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிமாறன் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இவர்களது உத்தரவின் பேரில், சம்மந்தப்பட்ட இடத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் திவ்யா, மாநகர் அலுவலர் (பொ) ஜெபாஸ்டின், மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் தட்சணாமூர்த்தி, பாலமுருகன், செல்வராணி ஆகியோர் குடோனில் தீவிர சோதனை செய்தனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், பேப்பர் கப், பிளாஸ்டிக் குவளைகள் சுமார் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான 1500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment