திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 3 கிராம் தங்க தோட்டை பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று அங்கம்மாள்(65) என்ற மூதாட்டியிடம் உதவி செய்வதுபோல் நடித்து காதில் அணிந்திருந்த 3 கிராம் தங்க தோட்டை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நகர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில், நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயபிரகாஷ் (22), ராஜ்தனுஷ் (20) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 3 கிராம் தங்க கம்மல், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment