கொடைக்கானலுக்கு ஆளுநர் R.N.ரவி வருகை - கொடைக்கானல் மலைச்சாலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை*
கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் ஆளுநர் தங்கும் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மற்றும் மோப்பநாய் சோதனை நடைபெறுகிறது. டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமையில் எஸ்.பி.க்கள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன் உமேஸ் டோங்கரே (தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் வத்தலக்குண்டு - கொடைக்கானல் மலைச்சாலையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment