ஆளுநர் வருகை:கொடைக்கானலில் போக்குவரத்து மாற்றம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் 14ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு கொடைக்கானலுக்கு செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 14ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை மற்றும் 16ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வத்தலகுண்டு - கொடைக்கானல் ரோடு வழியாக மேலே செல்வதற்கும், மேலிருந்து கீழே இறங்குவதற்கும் அனுமதி இல்லை. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக அனைத்து வாகனங்களும் பழனி - பெருமாள் மலை வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment