அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் 31ஆம் ஆண்டு திருவிழா மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டி ஜோசப் காலனியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் 31-ஆம் ஆண்டு திருவிழா கடந்த மே-12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து இன்று மே-13ம் தேதி மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை துணை மேயரும், திமுக மாநகர செயலாளருமான ராஜப்பா துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மே-14 ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலி அதனை தொடர்ந்து பகல் தேர்பவனி நடைபெறுகிறது.
இவ்விழாவில் மாமன்ற உறுப்பினர் அருள்வாணி, மாதா கோயில் தலைவர் மூர்த்தி, செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் ஜோசப் தர்மராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment