வீட்டுமனை பட்டா வழங்கும் அதிகாரத்தை தனி வட்டாட்சியரிடம் வழங்கக்கோரி திண்டுக்கல்லில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பகுஜன் ஜமாத் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் ஆதி திராவிட நலத்துறை தனி வட்டாட்சியரின் வீட்டு மனை பட்டா வழங்கும் அதிகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஆதி திராவிட நலத்துறைக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ஆதிதிராவிட பள்ளிகளை பொது பள்ளிகளோடு இணைக்க கூடாது. ஒன்றிய அரசு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கிய பட்டியல் இன மேம்பாட்டு நிதி பல்லாயிரம் கோடியை திரும்ப பெற சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மனோகரன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர்கள் நாச்சிமுத்து, முருகராஜ், சகாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment