கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலத் தொகுப்பு ஆய்வு.
தமிழ்நாடு அரசு வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நிலத் தொகுப்புகளை மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையத்தின் இயக்குனர் முனைவர் சங்கரலிங்கம் ஆய்வு செய்து, வேடசந்தூர் வட்டாரம் மாரம்பாடி மற்றும் உசிலம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தரிசு நலத் தொகுப்புகளை ஆய்வு செய்து தொகுப்பில் உள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும் தரிசு நிலங்களில் அடர்த்தியாக வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் இதர செடிகளை அகற்றிடும் வழிமுறைகளையும் தெரிவித்தார்.மேலும் வேளாண்மைத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற துறைகளுடன் இணைந்து அருகில் உள்ள குளங்களையும் தூர்வாரினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு சாகுபடி பரப்பும் அதிகரிக்கும் என்று அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, வேளாண்மை துணை இயக்குனர் வடிவேல், வேடசந்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் சின்னசாமி, மாரம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரொசாரியோ மற்றும் வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment