இராஜா கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை ஒதுக்கி வைப்பதாக திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை நற்பணி மன்ற திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் காமராஜ் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார். அவர் கூறுகையில்:-
திண்டுக்கல் மாவட்டம்
வேடசந்தூர் தாலுகா, கல்வார்பட்டி கிராமம் அருகே உள்ள எத்திலாம்பட்டியில்
இரு சமுதாயத்திற்கு பொதுவான கோயில்கள் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உள்ளது. இதில்
இராஜ கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களிடம் தலக்கட்டு வரி வாங்காமல் ஒதுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து வேடசந்தூர் தாசில்தார், கூம்பூர் காவல் நிலையத்தில் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்தார். இதையடுத்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment