ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார் அமைச்சர் இ.பெரியசாமி.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சியில் சமுதாயக்கூடம், கேத்தம்பட்டியில் தார்ச்சாலை, ஜி.நடுப்பட்டி தேவர்மலை அருகில் தரைமட்டத்தொட்டி ஆகியவை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு, முருநெல்லிக்கோட்டை ஊராட்சியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகள், கேத்தம்பட்டியில் ரூ.17 இலட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், ஜி.நடுப்பட்டி தேவர்மலை அருகில் ரெட்டியார் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 22 கிராம ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் 17 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத்தொட்டி ரூ.36 இலட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பிச்சையாண்டி, உதவி செயற்பொறியாளர் பார்த்தசாரதி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் சந்தனமேரி கீதா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்புலட்சுமி சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment