திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சீவல் சரக்கு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் வேலகவுண்டன்பட்டி கழிவு நீர் வாய்க்கால் பணி கடந்த மூன்று மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் நிலை உள்ளது தற்போது நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இதைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்று ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் வார்டு உறுப்பினர் கூறிய நிலையில் ஊர் மக்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் கூட்டம் நிறைவு பெற்றது தற்போது கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை குடிநீர் வசதி செய்து தரவில்லை இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இப்ப பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேலக்கவுண்டன்பட்டி ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் தாலுகா செய்தியாளர் நாகையா மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment