ஒரு மாத பெண் குழந்தையை விற்ற தந்தை உட்பட 4 பேர் கைது... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 3 May 2023

ஒரு மாத பெண் குழந்தையை விற்ற தந்தை உட்பட 4 பேர் கைது...


 ஒட்டன்சத்திரம் அருகே ஒரு மாத பெண் குழந்தையை விற்ற தந்தை உட்பட 4 பேர் கைது.


திண்டுக்கல் மாவட்டம் 

ஒட்டன்சத்திரம் அருகே பழக்கனூத்து அடுத்துள்ள தாத்தாகவுண்டனூரைச் சேர்ந்தவர் கோபி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். 

இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ருக்மணிக்கு கடந்த மாதம் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் இருவரும் மனமுடைந்தனர். இதையடுத்து 3 பெண் குழந்தைகளையும் வளர்ப்பது சிரமம் எனக் கருதி, பிறந்த பெண் குழந்தையை விற்க திட்டமிட்டனர். அதன்படி, அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன், ஒட்டன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்த தேன்மொழி, கரூர் பரமத்திவேலூரைச் சேர்ந்த தமிழரசி ஆகியோர் உதவியுடன், சில தினங்களுக்கு முன்பு கரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை விற்றுள்ளனர். இதையடுத்து தாதக்கவுண்டனூரைச் சேர்ந்த செவிலியர் குழந்தையைப் பற்றி கேட்டபோது, சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த செவிலியர், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸார்  கணவன்- மனைவியிடம்  விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் குழந்தையை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் தந்தை கோபி, உடந்தையாக இருந்த மணிகண்டன், தேன்மொழி, தமிழரசி ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையையும் மீட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad