திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பகல் 2 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு 11 மணி வரை மின்சார வினியோகம் இல்லாமல் சித்தையன் கோட்டையை சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் இருளில் மூழ்கி பொதுமக்கள் குழந்தைகள் அனைவரும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் இந்நிகழ்வை சித்தையன் கோட்டை மின்வாரிய ஊழியர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை மேலும் இப்பகுதியில் மின்சார ஊழியர்கள் யாரும் வருவதில்லை அப்படி அலுவலகம் சென்று கேட்டால் மிகவும் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள் ஆகவே சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகள் தலையிட்டு மின்சாரம் தடை படாமல் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுமாறும் மற்றும் இப்பதிக்கு மின்சார பணியாளர்களை நியமிக்கும் மாறும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் செய்தியாளர் எம் நாகையா மற்றும் தமிழக குரல் திண்டுக்கல் மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment