உயிர்நீத்த காவலர் குடும்பத்திற்கு நிதியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கற்பகவள்ளி இயற்கை எய்தினார். இதையடுத்து அவருடன் 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து இறந்த காலரின் குடும்பத்திற்கு ரூ.12,64,250 நிதி திரட்டினார்கள். இந்நிலையில் இன்று (02.05.2023) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், உயர்நீத்த காவலரின் தந்தையிடம் ரூ.12,64,250 நிதியை வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment