திண்டுக்கல்லில் ரயில் முன் பாய்ந்து சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை.
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த பாலமுருகன். இவரது மகள் யாஷினி (வயது 20). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த மாணவி இன்று மே-2ஆம் தேதி காலை பயணிகள் ரெயில்மூலம் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். தாமரைப்பாடி ரெயில்நிலையம் வந்ததும் ரெயிலை விட்டு இறங்கிய அவர் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment