விசிக தலைவர் திருமாவளவன் மணி விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல் நகரில் திருமா கல்வி அறக்கட்டளை அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவனின் மணிவிழா நடந்தது.
இதனை முன்னிட்டு மதுரை மாமன்ற உறுப்பினர் இன்குலாப் எழுதிய சிறுத்தைகளின் முதல் பாய்ச்சல் மாவீரன் மலைச்சாமி நூல் மற்றும் பேராசிரியர் வெற்றி சங்கமித்ரா எழுதிய என் பார்வையில் எழுச்சித்தமிழர் நூல், மற்றும் இளங்கவி அசோக்குமார் எழுதிய சமன்பாடு ஆகிய நூல்களின் ஆய்வரங்கம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரோக்கஸ்வளவன் தலைமை தாங்கினார். மாமன்ற உறுப்பினர் நடராஜன், செய்தி தொடர்பாளர் பிரேம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் நிர்வாகிகள் அன்பரசு, ரமேஷ், சசி, சண்முகவேல், நாகேந்திரன், தமிழ்வளவன், திருமாமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சுந்தராம்பாள் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment