திண்டுக்கல்லில் சோலார் பேனல்கள் திருடிய 4 பேர் கைது.
திண்டுக்கல் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் கருப்பணசாமி கோவில் பின்புறம் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையம் உள்ளது. இதில் சித்தையன்கோட்டை சேடப்பட்டியை சேர்ந்த வசீகரன் (வயது 39) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இங்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு அமைக்கப்பட்ட 21 சோலார் பேனல்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மேலாளர் வசீகரன், திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுமலையைச் சேர்ந்த குணசேகரன் (32), ராஜா (39), சிவக்குமார் (39), நிலக்கோட்டை அவையம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (24) ஆகிய 4 பேர் சோலார் பேனல்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து சோலார் பேனல்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment