திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை 220.1மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது அதிகபட்சமாக வேடசந்தூரில் 52.6மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு இந்த மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 04.05.2023 காலை 8 மணி முதல் 05.05.2023 காலை 8 மணி வரை மழை பொழிவின் விபரம் திண்டுக்கல்லில் 19.6மி.மீ மழையும், பழனியில் 4.5மி.மீ மழையும், சத்திரப்பட்டியில் 10.2மி.மீ மழையும், நத்தத்தில் 52மி.மீ மழையும், நிலக்கோட்டையில் 2.6மி.மீ மழையும்,
வேடசந்தூரில் 52.6மி.மீ மழையும், புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் 52.6மி.மீ மழையும், காமாட்சிபுரத்தில் 26மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஆக மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 220.1மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ. முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment