கோடைகால நீர் மோர் பந்தலை மேயர் மற்றும் துணை மேயர் திறந்து வைத்தனர்.
கோடைகாலத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, அனைத்து மாவட்டங்களிலும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்
திண்டுக்கல் மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் தலைமையில் அப்பகுதியில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கினர். இதில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஜான் பீட்டர், திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்ட திமுக மாநகர, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment