திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி வெற்றி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 4 May 2023

திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி வெற்றி

 


திண்டுக்கல்லில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி வெற்றி.


ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி கழகம் மற்றும் G.T.N கலைக் கல்லூரி, உடற்பயிற்சித் துறை  இணைந்து நடத்தும் மாவட்ட ஹாக்கி தொடர் போட்டியானது GTN கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இவ்விழாவிற்கு கல்லூரி இயக்குநர் துரை, ஒருங்கிணைந்த  திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி கழக நிர்வாகி ரமேஷ் பட்டேல், துணைத் தலைவர் ஞானகுரு, GTN கலைக் கல்லூரி ராமானுஜம், GTN கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 12 ஆண்கள் அணிகளும் , 8 பெண்கள் அணிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டியானது இம்மாதம் முழுவதும்  நடைபெறுகிறது. முதல் போட்டியானது GTN கல்லூரி மற்றும் லக்ஷ்மண சாமி நினைவு  கிளப் இடையே நடைபெற்றது. காலையில் நடைபெற்ற போட்டியில் பட்டேல் ஹாக்கி அகாடமி  மற்றும் இந்திராகாந்தி ஹாக்கி கிளப் 2:1 என்ற கோள் கணக்கில் திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி  வெற்றி பெற்றது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad