மாற்றுத்திறனாளிகள் அறையை திறக்ககோரி திண்டுக்கல் மேயர் அறை முன்பு முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்.
திண்டுக்கல் மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது காமராஜர் பேருந்து நிலையம். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு அறை அமைக்கப்பட்டிருந்தது. இதனை சங்க அலுவலகமாக சிலர் பயன்படுத்துவதாக தொடர்ந்து மேயருக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேயர் ஓய்வு அறையை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஓய்வு வரை பூட்டப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு ஏ.பி.ஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் வந்து பேருந்து நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஓய்வு அறையை திறக்ககோரி, மேயர் இளமதியின் அறையை முற்றுகையிட்டனர். இதையடுத்து மேயர் இளமதி மாற்றுத்திறனாளிகளிடம் பேசுகையில்:- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பேருந்து நிலையத்தில் ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் சங்க அலுவலகமாக பயன்படுத்துவதாக அடிக்கடி புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்தேன். இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வெடுக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment