வெறி நாய் கடித்து 4 சினை ஆடுகள் பலி.
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையில் மாரியம்மன் கோவில் அருகில் குலாம் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். அவரது ஆட்டை வெறிநாய் கடித்ததில் நான்கு சினை ஆடுகள் இறந்துவிட்டது. இதை அறிந்து உரிமையாளர் குலாம் ஆடுகளை பார்த்த போது மிகவும் வேதனையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இடையகோட்டை ஊராட்சியில் வெறிநாய்கள் சுற்றித் திரிவதால் மனிதருக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. அனைவரையும் காப்பாற்றும் பொறுப்பு இடையகோட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு உள்ளது . மேலும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளானர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment