காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் 39-வது அமைப்பு தின கொடியேற்றம் மற்றும் பெருந்திரல் முறையீடு ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களே வழங்க கோரியும், சத்துணவு துறையில் உள்ள காளி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத் தலைவர் மாலதி தலைமை ஏற்றார். வட்டாரச் செயலாளர் முருகவள்ளி கோரிக்கை விளக்க உரையாற்றினார் மாவட்டத் தலைவர் விவேகானந்தன், மாவட்ட துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ஜெசி நிறைவுறையாற்றினார். வட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment