திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர் மாதாந்திர கூட்டம் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சோபியா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை கோரிக்கை மனுவாக அளித்தனர். மனுவைப் பெற்ற தலைவர் ராஜா, மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment