2000 ரூபாய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த திண்டுக்கல் காங்கிரஸார்.
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும். மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். 2023 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததையொட்டி, திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வால்போஸ்டர் டிசைன் ஆன்லைனில் பரவத்தொடங்கியது. அதில்,
மத்திய பாஜக மோடி அரசால் உருவாக்கப்பட்ட 2000 ரூபாய் தாள்
19.5.2023 அன்று மாலை அகால மரணம் அடைந்தது. இறுதி அடக்கம் 20.5.2023 அன்று மாலை 4 மணிக்கு திண்டுக்கல் சாலை ரோடு, ஸ்டேட் பேங்க் அருகில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கண்ணீருடன்... திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி என்று இருந்தது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment