திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு உப்பு சக்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் நாகல் நகர் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி தலைமையில், துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி முன்னிலையில், கோடை வெயிலில் தாக்கத்தால் மக்களிடையே ஏற்படும் நீரிழப்பை தடுக்க உப்பு சக்கரை கரைசல் நீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு உப்பு சக்கரை கரைசல் நீர் தொடர்ந்து வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment