பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமாக இளைஞரணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் போதை பொருட்கள் பழக்கம் பெருகி வருவதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிழக்கு மாவட்ட தமாகா இளைஞர் அணி தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
தமாகா மாநில இளைஞரணி துணை தலைவர் VKND.கார்த்திக் முன்னிலை வகித்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.தண்டபாணி , முன்னாள் மாவட்ட தலைவர் VKN.தண்டபாணி, திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் CRP.ரதீஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொருளாளர் பாஸ்கர சேதுபதி, மாவட்ட பொது செயலாளர் சுரேஷ், மாநகர செயலாளர் விக்னேஷ், மாநகர செயலாளர்கள் புஷ்பராஜ், ஜெய்காந்த், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர், இளைஞரணி மாவட்ட பொது செயலாளர் பாலசுப்பிரமணி,
அய்யலூர் நகர தலைவர் முருகன், மாணவரணி முன்னாள் மாவட்ட தலைவர் உஸ்மான்,
திண்டுக்கல் வடக்கு வட்டார தலைவர் உதயகுமார் மற்றும் நத்தம் வட்டார தலைவர் அர்ஜுனன் உள்ளிட்ட நிர்வாகிகள் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment