திண்டுக்கல் மாவட்டத்தின் 28-வது ஆட்சியராக பூங்கொடி பொறுப்பேற்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சியராக விசாகன் இருந்து வந்தார். தற்பொழுது தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது. அதன்படி விசாகன் தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் (டாஸ்மாக்) கழகத்தின் மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் சேலம் கூட்டுறவு ஜவ்வரிசி உற்பத்தி மையத்தின் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று காலை திண்டுக்கல் மாவட்டத்தின் 28-வது புதிய ஆட்சியராக எம்.என் பூங்கொடி பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment