திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு மக்கள் பணிகளை மேயர் இளமதி துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி 15-வது நிதிக்குழு மானியம் 2022-2023ன் கீழ் ரூபாய் 421.95 லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணி மற்றும் கிணறுகளுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டும் பணி, கிணறு தூர்வாரும் பணி உள்ளிட்ட 38 பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான பூமி பூஜை சிறுமலை செட், ஆர்.எம் காலனி, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இதில் மண்டல தலைவர் ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment