மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 8 May 2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தலைமையில் இன்று(08.05.2023) நடைபெற்றது. 


தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது. 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 242 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களை  சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உடன் நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களின் மீதும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி பிரியங்கா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மு.ராணி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad