திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் எலெக்ட்ரானிக் வாகனங்கள் கண்காட்சி நடைபெற்றது.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகள் மற்றும் ஏ ஆர் 4 டெக் பிரைவேட் லிமிடெட் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கை விளைவுகளை விளக்கியும், அதற்கு மாற்றான எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மற்றும் அதனுடைய விழிப்புணர்வுகளை விளக்கும் விதமாக மாபெரும் எலக்ட்ரிக் வாகன கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பிஎஸ்என்ஏ கல்லூரி மாணவர்கள் பலவிதமான இரண்டு மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் சிறப்பிக்கும் விதமாக விவசாயத் துறைக்கு பயன்படும் எலக்ட்ரிக் டிராக்டர் மற்றும் ட்ரோன்களையும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் கல்லூரி இணை தலைவர் ஆர்.எஸ்.கே ரகுராம், கல்லூரி முதல்வர் வாசுதேவன் உள்ளிட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment