உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்ட கிளை மற்றும் இந்திய கட்டுநர் சங்கம் திண்டுக்கல் மையம் இணைந்து நடத்தும் உலக ரெட்கிராஸ் தினம்-2023ஐ முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் திண்டுக்கல் எம்.எஸ்.பி பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துவக்கி வைத்தார். இதில் அவைத்தலைவர் நாட்டாமை காஜாமைதீன், இந்திய கட்டுமான சங்க தலைவர் தர்மலிங்கம்,
எம்.எஸ்.பி பள்ளி தாளாளர் முருகேசன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் சையது அபுதாஹிர், மாவட்ட பொருளாளர் சுசிலா மேரி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராஜகுரு, துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment