+2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை.
திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி,
+2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டிலேயே
முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதையடுத்து மாணவி
நந்தினி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும்
ஆசியும் பெற்றார். அமைச்சர், மாணவிக்கு இனிப்பு ஊட்டிவிட்டு, நினைவு பரிசாக புத்தகம் வழங்கியும் பாராட்டினார். மேலும் மாணவியின் பெற்றோர் மற்றும் பயின்ற பள்ளியின் ஆசிரியர்களையும் பாராட்டினார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment