பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 68 லட்சத்தது 98 ஆயிரத்து 887 வருவாயாக கிடைத்தது
முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரத்து 447 வருவாயாக கிடைத்தது, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 384 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 444 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 4 கிலோ 499 (4499) கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 2-வது நாளாக நேற்று ரூ.2 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரத்து 440 வருவாய் கிடைத்தது. தங்கம் 865 கிராம், வெள்ளி 14 கிலோ 112 கிராம் (14112), வெளிநாட்டு கரன்சிகள் 688-ம் கிடைத்தன. கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 68 லட்சத்து 98ஆயிரத்து 887 வருவாயாக கிடைத்தது. தங்கம் 1309 கிராம், வெள்ளி 18 கிலோ 611 கிராம் (18611), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1072-ம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment