கொடைக்கானலில் பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் தலைவர் அப்துல்கனி ராஜா கைது.
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானலில் தங்கியிருந்த பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனிராஜாவை (50) கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் நிலைய வாசலிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் உறவினர்கள், அப்துல்கனி ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கார்த்திக் உத்தரவிட்டார். அதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் அப்துல்கனிராஜா அடைக்கப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment