திண்டுக்கல்லில் ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி“ பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா- அமைச்சர்கள் பங்கேற்பு.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி“ பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு,
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊரக வளர்ச்சித்துறையில் கருணை அடிப்படையிலான நியமனம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆடு, மாடு கொட்டகை அமைத்தல் திட்டத்தில் 63 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 1089 பயனாளிகளுக்கு ரூ.70 இலட்சம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சித்துறை(வாழ்ந்து காட்டுபோம்) இணை மாநிய திட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.34.02 இலட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.80.50 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.30,268 மதிப்பில் பண்ணைக்கருவிகள், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.8.04 இலட்சம் மதிப்பில் மின்னணு குடும்ப அட்டைகள், சமூக நலத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.3.92 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.1.96 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு ரூ.3.64 இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிதியில் வேளாண் கருவி வங்கி அமைத்தல் திட்டத்தில் 162 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலும், கூட்டுறவுத்துறை சார்பில் சிறு வணிக கடன் 350 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் 2 பயனாளிகளுக்கு ரூ.45.30 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 2004 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.7.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் மு.பாஸ்கரன், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் எஸ்.ராஜப்பா, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் கா.பொன்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.மகேஸ்வரி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) இரா.அமர்நாத், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment