திண்டுக்கல் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 9 May 2023

திண்டுக்கல் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

 


திண்டுக்கல் மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர். 



திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி 



ச.நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 

600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.  மாணவி நந்தினி, தமிழ்நாடு முதலமைச்சரை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன்  முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்  காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் 

நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad