திண்டுக்கல்லில் சர்க்கரை மற்றும் சிறுநீரக சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி மே-5, 6, 7 ஆகிய மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிறுநீரக மற்றும் சர்க்கரை நோய் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறுநீரக மருத்துவ நிபுணர் பாலமுருகன் கலந்து கொண்டு, சக்கரை மற்றும் சிறுநீரக நோய் சம்பந்தமான ரத்த பரிசோதனை, பிபி, இசிஜி, பிஎம்ஐ பரிசோதனை செய்யப்பட்டு, உணவு முறை ஆலோசனைகளையும் வழங்கினார். இம்முமுகாமில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்த ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் பல்வேறு இலவச மருத்துவ முகாம்கள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment