திண்டுக்கல் மாணவிகள் முதலிடம்... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 10 May 2023

திண்டுக்கல் மாணவிகள் முதலிடம்...

 


மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் திண்டுக்கல் மாணவிகள் முதலிடம்.


தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் அசோசியேசன் சார்பாக, ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் ஆதாரிட்டி ஆப் தமிழ்நாடு உடன் இணைந்து நடத்திய 2022 - 23 க்கான "டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்" மாநில அளவிலான போட்டியில் 13 (U13 G) வயதிற்கான சிறுமியர் பிரிவில், திண்டுக்கல் மாவட்டம் முதல்முறையாக, முதல் இடத்தை பிடித்து கோப்பையை வென்றுள்ளது. திண்டுக்கல் மாவட்ட அணியில், செல்வி ரிச்சிதா, செல்வி தன்மயா, செல்வி அக்ஷரா (பட்டிவீரன்பட்டி) , செல்வி ஸ்ரீதேவி (பட்டிவீரன்பட்டி) ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த அணியினர் இத்தனை வருடங்களில், இதுவரை நடந்த போட்டிகளில், இந்த கோப்பையை வென்றிருப்பது, இதுவே முதல் முறையாகும். இந்த அணியின் பயிற்சியாளர்களாக, திண்டுக்கல் மாவட்டத்தின் ஜேம்ஸ் மற்றும் பட்டிவீரன்பட்டி மலர்வண்ணன்  இருந்தனர். மேலும் இதே போட்டியில், 15 வயதிற்கு (U15 G) உட்பட்ட சிறுமியர் பிரிவிலும், திண்டுக்கல் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad